சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும் தமிழ்நாடு சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 836 குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 869 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரு பகுதியில் அதிக தொற்று ஏற்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, 5 தெருக்களில் தலா 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்றும், 25 தெருக்களில் தலா ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்புக்குக் காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்