ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,594 பேருக்குக் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 2) ஒரே நாளில் 1,594 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Jan 2, 2022, 9:39 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக இன்று (ஜனவரி 2) 1,594 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜனவரி 1) தொற்றினால் 1,489 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் 100 பேருக்குப் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 20 ஆயிரத்து 944 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 682 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாள்களில் அதிகரித்து வந்த பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கையில் 3.3 சதவீதமாகவுள்ளது.

மேலும் புதிதாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 29 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 1,575 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த 6 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த 2 நபர்களுக்கும், கனடாவிலிருந்து வந்த ஒருவருக்கும், லண்டனிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், பீகார் மாநிலம் மற்றும் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 1,594 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 304 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 624 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 5ஆயிரத்து 34 என உயர்ந்துள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 790ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு வெளிநாடுகளிலிருந்து வந்த 23 ஆயிரத்து 326 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் 277 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். மரபணுக்களைப் பரிசோதனை செய்ததில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பிலிருந்த 121 நபர்களுக்கு எஸ் ஜூன் டிராப் கண்டறியப்பட்டது.

இவர்களில் குணமடைந்த 98 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.