சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2018ஆம் ஆண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2018ஆம் ஆண்டு திமுக சார்பில், மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து ரயில் மறியல் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தினர்.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதைய அதிமுக அரசை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.
இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிய மூவர் மீது மட்டும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த குற்ற வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் திமுக எம்எல்ஏ கார்த்திக் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், திமுக நடத்திய இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அந்த மூவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 20 பேர் படுகாயம்.. இம்பாலில் மீண்டும் ஊரடங்கு அமல்!