ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்க அனுமதி - kallakurichi school incident

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தையடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கு: 5 - 8 வரை வகுப்புகள் துவக்கம் - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jan 11, 2023, 6:55 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த மாணவி ஶ்ரீமதி மரணமடைந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இதனை அடுத்து பள்ளி மூடப்பட்டது.

தற்போது பள்ளியை திறக்கக்கோரி தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளியை திறக்க அனுமதியளித்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 10) மீண்டும் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிரந்தரமாக இரண்டு உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது நிலைமை சீராக உள்ளதாகவும், உதவி ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக பள்ளியைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மற்ற வகுப்புகள் திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் எனக் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தார். அதோடு பள்ளி வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் காவல்துறை சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மளிகை வியாபாரியை தாக்கிய மர்ம கும்பல்; போராட்டம் நடத்துவதாக வணிகர் சங்கம் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.