சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும் உள்ளன. இச்சாலைகளில் மாநகராட்சியின் சார்பில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேலும் மாநகரின் 200 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டு குப்பைகளை கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
![corporation worker corporation worker night cleaning work night cleaning work இரவு நேரங்களில் தூய்மை பணி தூய்மை பணி தூய்மைப் பணியாளர்கள் chennai news chennai latest news சென்னை செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12713544_che.png)
இரவு நேரங்களில் பணி
சாலைகளில் தூய்மைப் பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் பொழுதும், பேருந்து, உட்புற சாலைகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு பேருந்து சாலைகளிலும், உள்புற சாலைகளிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 147 கம்பாக்டர் வாகனங்கள், 50 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், 23 டிப்பர் லாரிகளும் மற்றும் 1,786 தூய்மைப் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள், பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்கள்: கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்பு