ETV Bharat / state

சென்னையில் ரூ.430.11 கோடியில் புதிய கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி  திட்டம்

பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ராயபுரம், திரு.வி.க, தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலத்தில் 372 இடங்களில் 430.11 கோடி ரூபாயில் புதிய கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 8, 2023, 7:57 PM IST

Updated : Mar 8, 2023, 9:00 PM IST

சென்னை: பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ராயபுரம், திரு.வி.க, தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலத்தில் 372 இடங்களில் 430.11 கோடி ரூபாயில் புதிய கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் தேனாம்பேட்டை (மெரினா கடற்கரை) ஆகிய மண்டலங்களில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகளை கட்டி பராமரிக்க 8 ஆண்டுகளுக்கு பராமரிப்பை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ராயபுரம் மண்டலத்தில் 227 இடங்களிலும் திரு.வி.க மண்டலத்தில் 134 இடங்களிலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 இடங்களில் என 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் அமைய இருக்கிறது.

இதையும் படிங்க: ஸ்டாலின் நினைத்தால் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் - டிடிவி தினகரன் விமர்சனம்

இதில் 90 இடங்களில் புதிதாக கழிவறைகளையும், 88 இடங்களில் ஏற்கனவே கட்டப்பட்டு அதிக அளவில் சேதம் அடைந்த கழிவறைகளையும், 194 இடங்களில் சிறிய அளவில் சேதம் அடைந்த கழிவறைகளையும் 430.11 கோடியில் 3 ஆயிரத்து 270 சீட்டுகளை கொண்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இத்திட்டத்தின் காலம் மொத்தம் ஒன்பது ஆண்டுகளாக இருக்க உள்ளது. இதில் வடிவமைப்பு கட்டுதல் மற்றும் உருவாக்குதல் முறையாக ஒரு வருடமும் மற்றும் பராமரிப்புக்கு 8 ஆண்டுகள் என ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடலாக கட்டப்படுகிறது.

அடுத்த கட்டமாக மீதம் உள்ள மண்டலங்களில் உள்ள கழிப்பறைகளை என் உரையிலேயே பராமரிக்க திட்ட ஆலோசகர் மூலம் மாநகராட்சி விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. முன்னதாக "நலம்" என்ற திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச இருதய பரிசோதனை ஊர்தியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

மேலும், மீதமுள்ள மண்டலங்களில் உள்ள கழிப்பறைகள் இதே முறையில் பராமரிக்க திட்ட ஆலோசகர்கள் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், அமைச்சர் கே.என். நேரு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, ஃபெர்க்ரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு நிறைவு.. இரண்டு வாரத்தில் அறிக்கை.. காவல் துறை தகவல்..

Last Updated : Mar 8, 2023, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.