ETV Bharat / state

குப்பை கொட்டும் வளாகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்! - bio_mining palnt

பள்ளிக்கரணையில் அமைய உள்ள தலா 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட 2 உயிரி எரிவாயு மையப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

corporation-commidoner-inspected-bio-mining-palnt
உயிரி எரிவாயு மையப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
author img

By

Published : Sep 16, 2021, 6:17 AM IST

சென்னை: சென்னை பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio Mining) முறையில் அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டெடுக்கும் திட்டப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

மேலும், இம்மையத்தில் இயந்திரங்களை பொருத்தும் பணியும், கட்டிடப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், பணிகளை விரைந்து முடித்து குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் முறையை விரைவில் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் சோதனை முறையில் செயல்பட்டு வரும் கட்டிட இடிபாடு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும், தோட்டக்கழிவுகள், தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்யும் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், பள்ளிக்கரணை குப்பைக் கொட்டும் வளாகத்திற்கு சென்று அங்கு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது, பள்ளிக்கரணை குப்பைக் கொட்டும் வளாகத்தில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த சுமார் 40,853 கன மீட்டர் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து மீட்கப்பட்ட நிலப்பகுதியை பார்வையிட்டார். மேலும், அவ்விடத்தில் அமையவுள்ள தலா 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட 2 உயிரி எரிவாயு மையப்பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில், 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஒரு உயிரி எரிவாயு மையம்-1ன் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திமுக நிரந்தர ஆட்சி...சபதம் ஏற்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.