ETV Bharat / state

இரண்டாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: முழு விவரம்

author img

By

Published : Jun 1, 2020, 8:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், “தமிழ்நாட்டில் தற்போது 72 பரிசோதனை மையங்கள் இயங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அவற்றில் 11,377 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிற்குள் இருந்த ஆயிரத்து 112 நபர்களுக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேர், டெல்லியில் இருந்து வந்த 10 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த மூன்று பேர், ஆந்திரப் பிரதேசம், கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும், ஹரியானாவில் இருந்துவந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 138 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு ஆயிரத்து 97 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 184 பேர் கரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேர், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறு பேர், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் என 11 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள்பட்ட 1,322 குழந்தைகளும், 60 வயதிற்குள்பட்ட 19,961 நபர்களில் 13 திருநங்கைகளுக்கும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 2,212 முதியவர்களும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையில் 15,770 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 ஆயிரத்து 181 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 7,450 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 138 பேர் சென்னையில் மட்டும் இறந்துள்ளனர். சென்னையில் நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருந்தாலும் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் பாதிப்பு விவரம்:

  • சென்னை - 15,770
  • செங்கல்பட்டு - 1,223
  • திருவள்ளூர் - 981
  • கடலூர் - 462
  • திருவண்ணாமலை - 430
  • காஞ்சிபுரம் - 416
  • அரியலூர் - 370
  • திருநெல்வேலி - 355
  • விழுப்புரம் - 354
  • மதுரை - 268
  • கள்ளக்குறிச்சி - 246
  • தூத்துக்குடி - 227
  • சேலம் - 192
  • கோயம்புத்தூர் - 151
  • பெரம்பலூர் - 142
  • திண்டுக்கல் - 145
  • விருதுநகர் - 124
  • திருப்பூர் - 114
  • தேனி - 109
  • ராணிப்பேட்டை - 103
  • தஞ்சாவூர் - 93
  • திருச்சிராப்பள்ளி - 88
  • தென்காசி - 88
  • ராமநாதபுரம் - 86
  • நாமக்கல் - 82
  • கரூர் - 81
  • ஈரோடு - 71
  • கன்னியாகுமரி - 69
  • நாகப்பட்டினம் - 60
  • திருவாரூர் - 47
  • வேலூர் - 47
  • சிவகங்கை - 34
  • திருப்பத்தூர் - 33
  • கிருஷ்ணகிரி - 28
  • புதுக்கோட்டை - 27
  • நீலகிரி - 15
  • தருமபுரி - 8

மேலும் உள்நாட்டு விமானங்களில் வந்தவர்களுக்கான தனிமைபடுத்தும் முகாமில் இருந்த 21 பேருக்கும், ரயில்களில் வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த 242 பேருக்கும் நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய ஒரு லட்சத்து ஐந்து ஆயிரத்து 727 நபர்களில் 1,628 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.