ETV Bharat / state

மெட்ரோ ரயிலில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - Metro Rail Company

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு அளிக்கும் பொருட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Corona virus awareness shows on metro train

author img

By

Published : Jan 20, 2021, 3:25 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்களுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது

இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அகரம் கலை குழுவுடன் இணைந்து வருகின்ற 22ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.50 மணிவரை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் (தெரு நிலை) கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நாடகம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 25ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை வண்ணாரப்பேட்டை மெட்ரோவிலிருந்து விமான நிலையம் மெட்ரோ வரையிலும், விமான நிலையம் மெட்ரோவிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயிலில் பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.