ETV Bharat / state

அண்ணா நகரில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா - சென்னையில் கரோனா நிலவரம்

சென்னை: அண்ணா நகரில் கரோனா தொற்றால் பாதிப்படைவோரின் எண்ணிக்கையானது 4 ஆயிரத்தை நெருங்குகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி
மாநகராட்சி
author img

By

Published : May 6, 2021, 7:03 PM IST

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துவருவதோடு, சில மண்டலங்களில் மட்டும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.

சென்னையில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 81 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 32 ஆயிரத்து 917 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் 4952 பேர் உயிரிழந்தனர்.

அதில், 30 முதல் 39 வயது உடையவர்கள் 21.83 சதவீதமும், 40 முதல் 49 வயது உடையவர்கள் 17.79 சதவீதமும் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஆண்கள் 56.69 சதவீதமும், பெண்கள் 43.31 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களில் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிட்டுள்ளது. அவை:

  • அண்ணா நகர் - 3817 பேர்
  • கோடம்பாக்கம் - 3308 பேர்
  • தேனாம்பேட்டை - 3032 பேர்
  • ராயபுரம் - 1818 பேர்
  • அடையாறு - 3061 பேர்
  • திரு.வி.க. நகர் - 2754 பேர்
  • தண்டையார்பேட்டை - 1724 பேர்
  • அம்பத்தூர் - 2945 பேர்
  • வளசரவாக்கம் - 2308 பேர்
  • ஆலந்தூர் - 1572 பேர்
  • பெருங்குடி - 2253 பேர்
  • மாதவரம் - 1205 பேர்
  • திருவொற்றியூர் - 743 பேர்
  • சோழிங்கநல்லூர் - 1044 பேர்
    மணலி - 318 பேர்

இதையும் படிங்க: 'கரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.