சென்னையிலிருந்து அந்தமானுக்கு செல்ல ’கோ ஏர்வேஸ்’ விமானம் இன்று (ஏப்ரல் 15) காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.
அப்போது, அந்தமானை சோ்ந்த தமிழரசன் (24), சென்னையில் தங்கி உயர் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், தமிழரசன் தனது சொந்த ஊர் செல்வதற்காக விமானநிலையம் வந்திருந்தார். அவரை பரிசோதித்தபோது அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழரசனுக்கு போர்டிங் பாஸ் கொடுக்காமல், அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வேறு எங்கும் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விமானநிலைய சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தனா். சுகாதாரத் துறையினா் தமிழரசனுக்கு கரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனா்.
மேலும், சுகாதாரத் துறையினா் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கோ ஏர்வேஸ் கவுன்ட்டா் மற்றும் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!