ETV Bharat / state

'கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கரோனா பரவாது' - கோழி இறைச்சி முட்டை சாப்பிடுவதால் கரேனா பரவாது

சென்னை: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதன் மூலம் கரோனா பரவாது என்று கால்நடை பராமரிப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

dont spread false news
dont spread false news
author img

By

Published : Apr 1, 2020, 2:45 PM IST

கரோனா தொற்று குறித்த அச்சம் எழுந்த பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோழி இறைச்சி விற்பனை 50 விழுக்காடு குறைந்துள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுவதால் கரோனா பரவாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை இது தொடர்பாக தெளிவுப்படுத்தும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்களின் உற்பத்தி, நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன் இறைச்சி, கால்நடைத் தீவனம், கால்நடைத் தீவன உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை முதன்மைச் செயலர் - கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி, கோழி தீவனம், கால்நடைத் தீவனம், உற்பத்திக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவுப் பொருள்கள் சாப்பிடுவதால் நோய் தொற்று பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாகத் தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான வழிநடத்தும் செய்தியாகும்.

வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையை இழப்பது ஒருபுறமிருந்தாலும் கோழி வளர்ப்பு, தொழில், அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போர்களும், விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து, மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

கரோனா பாதிப்பு மனிதனிடமிருந்து மனிதனுக்கு சுவாச குழாய் மூலம், தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் போன்றவற்றால் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.

கோழி இறைச்சி, முட்டையானது மலிவான புரத உணவாகும். அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டம் ஆகும்.

எனவே பொதுமக்கள் கோழி முட்டை இறைச்சி உண்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவியதாக எவ்வித நிகழ்வுகளும் இதுவரை நடைபெறவில்லை.

இதுபோன்ற தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை, கோழி இறைச்சியை உட்கொள்ளலாம்" என அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 37 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.