சென்னையில் உள்ள குடிசை மாற்றுப் பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள், தொண்டு நிறுவப் பணியாளர்களுடன் சேர்ந்து முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்குதல், கரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகின்றனர்.
அதன்படி, அண்ணா நகர் மண்டலம் நடுவங்கரை குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஹெல்ப் சைல்ட் ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பாதுகாப்பு பணிகளை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் அப்பணிகளை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து அவர் அப்பகுதி மக்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினி வழங்கினார். மேலும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு