சென்னை செங்கொடி சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
அதில், "கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள் என்னும் பாராட்டுச் சான்றிதழ்கள், நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை, மலேரியா, தினக்கூலி என்.எம்.ஆர், என்.யூ.எல்.எம் அம்மா உணவக ஒப்பந்த தொழிலாளர்களும் களப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது முரண்பாடாக உள்ளது.
எனவே, கரோனா தொற்று தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கும் சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.