ETV Bharat / state

சென்னை: புதிய தளர்வுகளில் கரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள்! - சென்னை பெருநகரில் நாளைமுதல் அரசு அறிவித்துள்ள தரவுகளுடன் கூடிய ஊரடங்கின் போது கரோனா பரவலை தடுப்பதற்காக காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் சென்னை மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ளது.

orona spread police prevention
orona spread police prevention
author img

By

Published : Jul 5, 2021, 4:54 AM IST

சென்னை: இன்று (ஜூலை 5) முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது கரோனா பரவலை தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இணைந்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் குருநாதா தடுப்பு வழி முறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிக்குப்பம், காசிமேடு மற்றும் வானகரம் ஆகிய இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்கள், கோயம்பேடு பூக்கடை, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தி நகர் போன்ற முக்கிய மார்க்கெட் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் அதிகமாக மக்கள் கூடும்போது கரோனா பரவ வாய்ப்பு உள்ளதால், நுழைவு வாயிலில் கூடாரங்கள் அமைத்தல், அங்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்பம் சோதனை செய்தல்,கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் மற்றும் முகக்கவசம் அனிவதை உறுதி செய்தல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரும்பு தடுப்புகள் மற்றும் வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பொது ஒலிபரப்பு கருவி மூலம் தகுந்த இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வழங்கப்பட்டு, பூங்காக்கள், கடற்கரைகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பாக தன்னார்வலர்கள் கரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை காவல் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு பணியில் செயல்படவுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் சென்னை மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ளது.

orona spread police prevention
orona spread police prevention
பொதுமக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காவல்துறை, மாநகராட்சி, சென்னை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அனைத்து வழிமுறைகளும் முறையாக பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.