மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 839 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 ஆயிரத்து 509 பேருக்கும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த நான்கு பேருக்கும் என மொத்தம் 26 ஆயிரத்து 513 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 72 லட்சத்து 4,120 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 29 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 198 பேர், அரசு மருத்துவமனையில் 292 பேர் என 490 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். இவர்களில் எந்தவித இணைய நோய்களும் இல்லாமல் 111 பேர் இறந்துள்ளனர்.
மேலும் சென்னையில் கரோனாவால் 2, 467 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 32 ஆயிரத்து 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்புத்தூரில் புதிதாக 3, 332 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 40 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை சிறிய அளவில் குறைய தொடங்கி உள்ளதால் மருத்துவமனைகளில் 25 ஆயிரத்து 134 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. தனிமைப்படுத்தும் மையங்களில் 36 ஆயிரத்து 723 படுக்கைகள் காலியாக உள்ளன.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை மாவட்டம் - 5, 06, 937
கோயம்புத்தூர் மாவட்டம் - 1,73, 842
செங்கல்பட்டு மாவட்டம் - 1,41,707
திருவள்ளூர் மாவட்டம்- 1, 02, 066
மதுரை மாவட்டம்- 65,512
காஞ்சிபுரம் மாவட்டம்- 63,865
சேலம் மாவட்டம் - 66, 764
திருப்பூர் மாவட்டம் - 62, 296
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 58, 208
ஈரோடு மாவட்டம் - 58, 278
கடலூர் மாவட்டம்- 49, 281
கன்னியாகுமரி மாவட்டம் - 49, 664
தூத்துக்குடி மாவட்டம் - 48 345
தஞ்சாவூர் மாவட்டம் - 48, 202
திருநெல்வேலி மாவட்டம் - 43, 656
வேலூர் மாவட்டம் -42, 577
திருவண்ணாமலை மாவட்டம் - 41, 761
விருதுநகர் மாவட்டம் - 38, 222
தேனி மாவட்டம் - 36, 908
ராணிப்பேட்டை மாவட்டம் - 34,935
விழுப்புரம் மாவட்டம் - 35, 042
கிருஷ்ணகிரி மாவட்டம் - 33, 167
நாமக்கல் மாவட்டம் -33, 210
திண்டுக்கல் மாவட்டம்- 27, 283
திருவாரூர் மாவட்டம் - 30, 326
நாகப்பட்டினம் மாவட்டம்- 29, 758
புதுக்கோட்டை மாவட்டம் -23, 164
திருப்பத்தூர் மாவட்டம்- 23, 178
தென்காசி மாவட்டம் -22, 768
கள்ளக்குறிச்சி மாவட்டம் -21, 540
நீலகிரி மாவட்டம் - 19, 661
தருமபுரி மாவட்டம் -18,956
ராமநாதபுரம் மாவட்டம்- 17,029
கரூர் மாவட்டம் -17, 598
சிவகங்கை மாவட்டம் -14,626
அரியலூர் மாவட்டம் -11,525
பெரம்பலூர் மாவட்டம் -8, 665
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,075
ரயில் மூலம் வந்தவர்கள்- 428
இதையும் படிங்க: மருத்துவத்துறை மாற்றங்கள் குறித்த FlCCl-யின் சர்வதேச கருத்தரங்கு: ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது!