ETV Bharat / state

கொரோனா பீதி: ரயிலில் பயணிகளுக்கு இச்சலுகைகள் இல்லையாம்!

author img

By

Published : Mar 15, 2020, 2:09 PM IST

சென்னை: ரயில்களின் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்போருக்கு, மெத்தை விரிப்பான்கள், ஜன்னல் திரை ஆகியவை வழங்கப்படாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

corona-panic-there-will-be-no-concessions-to-passengers-on-the-train-southern-railway-action-announced

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென்னக ரயில்வே துறை மூலம் இயக்கப்படும் ரயில்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ரயில்களுக்கு உள்புறமும், வெளிப்புறமும் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ரயில்களின் அனைத்து பெட்டிகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அனைத்து அலுவலர்கள், ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கேட்பொலி (ஆடியோ), காணொலிகள் மூலம் அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து ரயில்களிலும் உள்ள குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, மெத்தை விரிப்பான்கள், ஜன்னல் திரை சீலைகள் (woolen blankets) ஆகியவை பயணிகளுக்கு வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் நிச்சயமாக அவை வேண்டும் எனக் கேட்டால் மட்டுமே வழங்கப்படும் எனவும், தலையணைகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவை வழங்கம்போல் பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும், இந்த மாற்றங்கள் குறித்து ஏற்கனவே பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நடைமுறைகள் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை தொடரும் என்பதால், கொரோனா வைரஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுப்பதற்காகத் தென்னக ரயில்வே துறையால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெளிநாட்டுப் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தும் ஆஸ்திரேலியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.