இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 44 அரசு மற்றும் 33 தனியார் ஆய்வகங்களில் இதுவரை ஆறு லட்சத்து ஆயிரத்து 363 நபர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 ஆயிரத்து 841 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 642 பேரின் சளி மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இன்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 667 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொண்டதில், ஆயிரத்து 927 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று ஆயிரத்து 392 பேருக்கும், செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 105 பேருக்கும், காஞ்சிபுரம் 33 நபர்கள் என மொத்தம் 30 மாவட்டங்களில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்து 179 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 13 ஆயிரத்து 85 பேர் மருத்துவமனையில் உள்ளனர். செங்கல்பட்டில் 1,412 பேரும், திருவள்ளூரில் 771 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று, ஆயிரத்து எட்டு பேர் பூரண குணமடைந்த நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 333 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று தொற்றால் 19 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் 326 பேர் உயிரிழந்தனர். இதில் சென்னையில் மட்டும் 260 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக பாதிப்பு
- சென்னை - 25,937
- செங்கல்பட்டு - 2,328
- திருவள்ளூர் - 1,581
- காஞ்சிபுரம் - 600
- திருவண்ணாமலை - 548
- கடலூர் - 498
- திருநெல்வேலி - 407
- விழுப்புரம் - 392
- தூத்துக்குடி -389
- அரியலூர் - 384
- மதுரை - 343
- கள்ளக்குறிச்சி - 299
- சேலம் - 213
- திண்டுக்கல் - 185
- கோயம்புத்தூர் - 167
- ராணிப்பேட்டை - 164
- விருதுநகர் -159
- பெரம்பலூர் - 144
- தேனி - 134
- திருச்சிராப்பள்ளி - 132
- தஞ்சாவூர் - 127
- ராமநாதபுரம் - 126
- வேலூர் - 122
- திருப்பூர் - 114
- தென்காசி - 106
- கன்னியாகுமரி - 105
- நாகப்பட்டினம் - 92
- நாமக்கல் - 89
- கரூர் - 87
- திருவாரூர் - 83
- ஈரோடு - 74
- புதுக்கோட்டை - 45
- சிவகங்கை - 44
- திருப்பத்தூர் - 42
- கிருஷ்ணகிரி - 38
- தருமபுரி - 23
- நீலகிரி - 14