ETV Bharat / state

அண்ணாநகரில் 14 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு...!

சென்னை: அண்ணாநகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Corona infection in Chennai Anna Nagar has crossed 14,000 people

author img

By

Published : Aug 23, 2020, 12:22 AM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ராயபுரம், தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது.

இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பரவல் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கோடம்பாக்கத்தில் 14 ஆயிரத்தை கடத்திருந்த நிலையில் தற்போது அண்ணாநகரிலும் 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடைபெற்றது, மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுவரையிலும் சென்னை மொத்தம் 1,22,757 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,07,492 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12,708 நபர்களும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,557 நபர்கள் இறந்தனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் இறந்தவரின் விழுக்காடு மூன்றாக உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 14,196

அண்ணாநகர் - 14,085

ராயபுரம் - 12,690

தேனாம்பேட்டை - 12,324

தண்டையார்பேட்டை - 10,862

திரு.வி.க. நகர் - 9,577

அடையாறு - 9,325

வளசரவாக்கம் - 7,615

அம்பத்தூர் - 8,479

திருவொற்றியூர் - 4,186

மாதவரம் - 4,345

ஆலந்தூர் - 4,272

சோழிங்கநல்லூர் - 3,199

பெருங்குடி - 3,866

மணலி - 1,987

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.