அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மேற்குவங்க மாநிலம் பாக்டோக்ராவை சோ்ந்த பிரதீப்ராய் (40) என்ற பயணி மிகவும் சோா்வாக, சளி இருமலுடன் காணப்பட்டாா். இதையடுத்து விமான ஊழியா்கள் சந்தேகமடைந்து, அவரின் கரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கிப்பாா்த்தனா். அதில் அவருக்கு கரோனா பாசிடிவ் இருப்பது தெரியவந்தது.
இதைகண்டு அதிா்ச்சியடைந்த விமான ஊழியா்கள், அவருடைய பயணத்தை ரத்து செய்தனா். ஆனால் பிரதீப்ராய், தனக்கு நோய் ஆரம்பநிலையில் தான் உள்ளது, சொந்த ஊரில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினாா். ஆனால் விமானநிலைய அலுவலர்கள், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. விமானநிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்து, பிரதீப்ராயை அவா்களிடம் ஒப்படைத்தனா்.
இதனையடுத்து அவர் தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கரோனாவால் ஒரே நாளில் 4,187 பேர் பலி