சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆயிரத்து 417 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் முதற்கட்டமாக 67 மாணவர்களுக்கும், தற்போது மேலும் 20 மாணவர்களுக்கும் என மொத்தம் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர் கல்லூரிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அதேபோல் கடந்த 3ஆம் தேதி தாம்பரம் பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்தவ கல்லூரி விடுதியில் உள்ள 167 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தற்போது 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மேலும் 197 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. தொற்று பாதிப்புக்குள்ளான மாணவர்கல் கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4,862 பேருக்குக் கரோனா பாதிப்பு