இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மார்ச் 22ஆம் தேதி முதல் நிலவிவரும் தடை செய்யப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், தங்கள் மொபைல் வேலிடிட்டி முடிவடைந்த நிலையில், தங்கள் மொபைல் வேலிடிட்டியை நீட்டிக்க முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டு பி.எஸ்.என்.எல் மொபைல் வேலிடிட்டி காலத்தை இலவசமாக ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் இன்கமிங் அழைப்புகளை தொடர்ந்து பெறுவார்கள். மேலும், இந்தத் தடைக் காலத்தில் டாக்-டைம் இருப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல். ரூ. 10 மதிப்பிலான இலவச டாக்-டைம் கூடுதல் சலுகையாக அளிக்கிறது.
இக்கட்டான சூழலில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்களுக்கு தொலைதொடர்பு வசதிகள் தடையின்றி கிடைக்க இச்சலுகைகள் பயன்படும் வகையில் பி.எஸ்.என்.எல் வழங்கியுள்ளது.
பி.எஸ்.என்.எல் குடும்பம் தனது வாடிக்கையாளருடன் இந்த இக்கட்டான நேரத்தில் துணை நிற்கிறது. மேலும், தங்களது அனைத்து வித ரீசார்ஜ் தேவைகளுக்கும், “Go Digital”, டிஜிட்டல் முறையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது. அதாவது மொபைல் ரீசார்ஜ் செய்ய பல்வேறு விதமான முறைகள் பயன்பாட்டிலுள்ளன.
உதாரணமாக, MyBSNL mobile App, BSNL இணையதளம், புழக்கத்திலுள்ள பிரபலமான ‘வேலட்டுகள்’ முதலானவை மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.8.46 லட்சம் மதிப்புள்ள 168 செல்போன் டவர் பேட்டரிகள் திருட்டு!