சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 380 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும் 1,179 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரத்து 378 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 26 லட்சத்து 89 ஆயிரத்து 463 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 326 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 1,407 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 39 ஆயிரத்து 209 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 11 நோயாளிகளும் என 16 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 928 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் 156 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 127 நபர்களுக்கும் அதிகபட்சமாக புதிதாக கரோனா வைரஸ் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை மாவட்டம் - 5,53,079
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,45,226
செங்கல்பட்டு மாவட்டம் - 1,70,664
திருவள்ளூர் மாவட்டம் - 1,18,893
ஈரோடு மாவட்டம் - 1,03,440
சேலம் மாவட்டம் - 99,165
திருப்பூர் மாவட்டம் - 94,529
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 77,005
மதுரை மாவட்டம் - 75,015
காஞ்சிபுரம் மாவட்டம் - 74,580
தஞ்சாவூர் மாவட்டம் - 74,782
கடலூர் மாவட்டம் - 63,855
கன்னியாகுமரி மாவட்டம் - 62,157
தூத்துக்குடி மாவட்டம் - 56,146
திருவண்ணாமலை மாவட்டம் - 54,750
நாமக்கல் மாவட்டம் - 51,666
வேலூர் மாவட்டம் - 49,686
திருநெல்வேலி மாவட்டம் - 49,232
விருதுநகர் மாவட்டம் - 46,226
விழுப்புரம் மாவட்டம் - 45,720
தேனி மாவட்டம் - 43,540
ராணிப்பேட்டை மாவட்டம் - 43,318
கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,352
திருவாரூர் மாவட்டம் - 41,167
திண்டுக்கல் மாவட்டம் - 33,001
நீலகிரி மாவட்டம் - 33,343
கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,246
புதுக்கோட்டை மாவட்டம் - 30,044
திருப்பத்தூர் மாவட்டம் - 29,216
தென்காசி மாவட்டம் - 27,321
தர்மபுரி மாவட்டம் - 28,219
கரூர் மாவட்டம் - 23,862
மயிலாடுதுறை மாவட்டம் - 23,181
ராமநாதபுரம் மாவட்டம் - 20,519
நாகப்பட்டினம் மாவட்டம் - 20,881
சிவகங்கை மாவட்டம் - 20,060
அரியலூர் மாவட்டம் - 16,809
பெரம்பலூர் மாவட்டம் - 12,028
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,027
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!