சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் சிறப்புக் குழந்தைகளுக்காக பால விஹார் என்ற தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 10 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை என மொத்தம் 172 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊழியர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகள், ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் காப்பகத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் காப்பகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு