சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆக. 8) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 325 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 969 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3 கோடியே 85 லட்சத்து 36 ஆயிரத்து 958 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை இதில் 25 லட்சத்து 73 ஆயிரத்து 352 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 777 பேர் என உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29 நோயாளிகள் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது.
அதிக அளவாக கோவையில் 208 பேரும், ஈரோட்டில் 198 நபர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் முறை: கொடைக்கானலில் 100 விழுக்காடு தடுப்பூசி!