ETV Bharat / state

'பிணையில் சென்று திரும்பும் சிறைவாசிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்'  - சிறைத்துறை டிஜிபி

author img

By

Published : Jul 12, 2020, 2:46 PM IST

சென்னை: சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் சாதாரண மற்றும் அவசர கால விடுப்பில் சென்று மீண்டும் சிறையில் அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா தொற்று பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்பு தான், சிறையில் அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை காவல் தலைமை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னை புழல் சிறை
சென்னை புழல் சிறை

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வெளி நபர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சிறையில் உள்ள கைதிகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை புழல் சிறையில் இதுவரை 30க்கும் அதிகமான கைதிகளுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதே போல் விழுப்புரம் சிறையிலும் கைதிகளுக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறையில் கரோனா பரவலைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக கைதிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லை எனவும், கைதிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட தனி அறை ஒதுக்குவது எனவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறையிலிருந்து விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் பிணை அல்லது சாதாரண மற்றும் அவசர கால விடுப்பில் சென்று, மீண்டு சிறையில் அனுமதிப்பதற்கு முன்பு கரோனா தொற்று பரிசோதனை செய்து, கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்ய வேண்டும் எனவும்;

இதை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சிறைத்துறை காவல் தலைமை இயக்குநர், அனைத்து சிறை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.