ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கிவைத்த சென்னை ஆணையர்!

சென்னை: கரோனா தொற்று குறித்து எல்இடி திரையில் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை சென்னை ரிப்பன் மாளிகையில் ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.

author img

By

Published : Jul 29, 2020, 4:57 AM IST

சென்னை ஆனையர்
சென்னை ஆனையர்

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை முதலமைச்சர் ஊரடங்கு அறிவித்ததும், அதே நேரத்தில் பரிசோதனைகளை 3 மடங்கு அதிகரித்ததும் பலன் அளித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகளைச் செய்துவருகிறோம். தினமும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்துவருகிறோம். அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரையிலும் 23,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 14 லட்சம் பேர் இதன் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத் திணறல் இருந்தாலோ அல்லது ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலோ மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ் மூலம் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகுதான் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 15-20 நபர்களைக் களப்பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

திருமிழிசையைப் பொறுத்தவரை தற்காலிக மார்க்கெட்தான். சிறப்பு அனுமதியுடன் 5,000 தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் விலையேற்றமோ, தட்டுப்பாடோ ஏற்படவில்லை.

இ-பாஸைப் பொறுத்தவரை மருத்துவம் மற்றும் இறப்பு காரணங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. ஆவணங்கள் சரியாக இல்லாத பட்சத்தில்தான் நிராகரிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் முறையான இ-பாஸ் பெற்றுள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.