ETV Bharat / state

‘கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’ - கரோனா

சென்னை: கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டுமென காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

corona awareness
‘கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’
author img

By

Published : Apr 10, 2021, 9:21 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில், காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு, கரோனா நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து காவல் துறை அலுவலர்கள், ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டது.

‘கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’

இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் காவல் ஆளிநர்களுக்கு கரோனா தடுப்பு வழிமுறையாக கபசுரக் குடிநீரையும் அவர் வழங்கி தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சென்னை காவல் துறை கடந்த ஆண்டு கரோனாவை தடுக்க பல்வேறு வியூகங்களை வகுத்தது. தற்போது பொதுமக்களிடையே கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அமைத்துள்ளது. காவல் துறையினர் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

corona awareness
‘கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’

காவல் துறையினர் பொதுமக்களிடம் நெருங்கி பழகும் சூழல் அதிகம் ஏற்படுவதால், காவல் துறையைச் சேர்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். இதுவரை 5,998 பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை 100 விழுக்காடாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.

கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் கரோனா நோய்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் 87,296 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் 11,139 பேர் மீது வழக்குகளும், வீட்டு கண்காணிப்பை மீறி செயல்பட்டவர்கள் 117 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சென்னை காவல்துறை கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக விழிப்புடன் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ’ஜெ வழியில் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமையுங்கள்’ - கட்சியினருக்கு டிடிவி அன்பு வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.