சென்னை: கடந்த 2004, டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோர்களுக்கு இன்று (டிச.26) 18வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கார் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கிச் சென்ற சுற்றுலா வாகனம் ராதாகிருஷ்ணன் சென்ற காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் செயலாளர் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
மேலும் எந்த வித காயமும் இல்லாமல் செயலாளர் ராதாகிருஷ்ணன் உயிர் தப்பினார். அப்போது தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தார். பின்னர் புறப்பட்டுச் சென்ற ராதாகிருஷ்ணன் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே சுற்றுலா வாகனம் சாலையின் வளைவு சாலை விதியை மதிக்காமல் இயக்கப்பட்டதே விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Tsunami anniversary: கடலில் பால் ஊற்றி தூத்துக்குடி மீனவர்கள் அஞ்சலி!