ETV Bharat / state

பெற்ற தாயின் உதவியுடன் மகள் உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னையில் கொடூரம்! - sexually abusing 5 girls in chennai

சென்னை டிபி சத்திரத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூல் ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai
சென்னையில் கொடுமை
author img

By

Published : Aug 29, 2021, 2:45 PM IST

சென்னை: டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவர் அப்பகுதியில் கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ராணியின் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த பெருமாள், அவரது ஒன்பது வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார்.

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தது லட்சுமிக்கு தெரிந்தும் அவர் அதனைக் கண்டுகொள்ளாததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு நான்கு முறைகளுக்கும் மேல் பாலியல் வன்புணர்வு செய்த அவர், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, சிறுமியின் தோழிகள் நான்கு பேருக்கும் பெருமாள் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பெருமாள் ( 48), ராணி (30), ராணியின் சகோதரி வாணி(28) ஆகிய மூன்று பேரையும் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.