தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.19) டிஎன்பிஎஸ்சி (TNPSC Group - 1) குரூப் 1-க்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு, எதிர்த்து வரும் நிலையில் இன்று நடந்த குரூப் 1 தேர்வில் அப்புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கேள்வி கேட்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூற்று [A]: கற்பித்தல் - கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக்கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.
காரணம் [B]: புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கப்பூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
(A) [A] என்பது சரி. ஆனால், [R] என்பது தவறு.
(B) [A] என்பது தவறு. ஆனால், [R] என்பது சரி.
(C) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கம்.
(D) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி. ஆனால், [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல.
(E) விடை தெரியவில்லை
அதேபோல, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பின் வரும் கூற்றுகளில் எது உண்மையானவை என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
2. ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்து 2014 டிசம்பர் 31 க்கு முன் இந்தியாவில் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தர்கள், பார்சிகள் அனைவருக்கும் 12 ஆண்டிற்கு பதில் 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்.
3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக, 6 ஆண்டுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் சிஏஎ உதவும் என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு அமைப்பான தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் வாரியத்தில் மாநில அரசின் கொள்கைக்கு எதிரான வினாக்கள் இடம்பெற்றுள்ளது தேர்வர்கள் மட்டுமின்றி பலதரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கூகுள் மேப்பால் குரூப்-1 தேர்வை தவறவிட்ட பெண்!