சென்னையில் கடந்த 14 நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படாத 897 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை, ஒரே நாளில் மாநகராட்சி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. தற்போது சென்னையில் 254 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒரு தெருவில் ஒரு நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும், முழு தெருவையும் அடைத்து, எவரும் வெளியே செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டு வந்தன.
தற்போது ஒரு தெருவில் ஐந்து நபருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டால் தான் அந்தப் பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் மொத்தம் 254 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் கரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும், சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ராயபுரத்தில் 2324 நபர்களும் , கோடம்பாக்கத்தில் 1646 நபர்களும் , திருவிக நகரில் 1393 நபர்களும், தண்டையார்பேட்டையில் 1322 நபர்களும், தேனாம்பேட்டையில் 1412 நபர்களும், அண்ணா நகரில் 1089 நபர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு பகுதிகளும் சென்னையின் கரோனா மையப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 874 பேருக்கு கரோனா உறுதி