ETV Bharat / state

ரூ.535 கோடியுடன் நடுரோட்டில் கண்டெய்னர்கள்! - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு - தாம்பரத்தில் உச்சகட்ட பரபரப்பு

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு கொண்டு சென்ற வாகனம் தாம்பரம் அருகே பழுதடைந்து பாதிவழியில் நின்றநிலையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 17, 2023, 7:10 PM IST

சென்னை: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு கொண்டு சென்ற 2 கண்டெய்னர் லாரிகள் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் பழுதானதால் இரண்டு வாகனமும் அருகில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் வாகனம் சரி செய்யப்படாததால் சென்னையில் உள்ள இரண்டு வாகனங்களையும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பழுதான வாகனத்தை மட்டும் கட்டி இழுத்து செல்வதற்கு மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் கட்டி இழுத்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளை வங்கி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.535 கோடி பணத்துடன் வாகனம் பழுதானதால் உடனடியாக அருகில் உள்ள குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென பழுதான வாகனத்திற்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டுனரிடம் கேட்ட பொழுது, பணம் கொண்டு செல்வது வழக்கமான நடைமுறைதான் என்றும். இருப்பினும் திடீரென ஒரு வாகனத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மற்றொரு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்கும் இரண்டு வாகனங்களையும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கட்டுக்கட்டான கரன்சியுடன் நடு ரோட்டில் வாகனங்கள் நிற்பதால் அப்பகுதியில் பரப்ரப்பு ஏற்ப்பட்டது.

இதையும் படிங்க: கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்... மெத்தனத்தில் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.