சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வதிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டிவருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளான பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக இன்று மாலை வெளியிட்டது.
பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பட்டியல்
- செஞ்சி
- மைலம்
- ஜெயங்கொண்டம்
- திருப்போரூர்
- வந்தவாசி(தனி)
- நெய்வேலி
- திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)
- ஆற்காடு
- கும்மிடிப்பூண்டி
- மயிலாடுதுறை
- பென்னாகரம்
- தர்மபுரி
- விருத்தாச்சலம்
- காஞ்சிபுரம்
- கீழ்பென்னாத்தூர்
- மேட்டூர்
- சேலம்(மேற்கு)
- சோளிங்கர்
- சங்கராபுரம்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
- பூந்தமல்லி(தனி)
- கீழ்வேலூர்(தனி)
- ஆத்தூர்(திண்டுக்கல் மாவட்டம்)
இதையும் படிங்க: காட்சிகள் மறையலாம் ஆனால் நினைவுகள்: பழனிசாமியின் ஆட்சி - ஒரு ரீவைண்ட்