ETV Bharat / state

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து வடசென்னை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - congress protest against Priyanka Gandhi arrest

சென்னை: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து வட சென்னை மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 4, 2021, 3:19 PM IST

உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட உழவரின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கெரி மாவட்டம் லக்கிம்பூர் பகுதியில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டார். பின்னர் லக்னோவிலிருந்து 90 கி.மீ. தூரத்திலுள்ள சீதாபூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை, தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் கொடுங்குன்றநாதர் கண்ணதாசன் நகர் பகுதியில் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் டில்லி பாபு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உ.பி., முதலமைச்சர் யோகி அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.