ETV Bharat / state

ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரம் - ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி! - ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 4 வண்டி எண் 39237 மதுரைக்கு செல்ல காத்திருந்த வைகை எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி முன் புறம் அமர்ந்து காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

author img

By

Published : Apr 15, 2023, 3:57 PM IST

ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

சென்னை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துக்கோன் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் முத்தழகன் வடக்கு மாவட்ட தலைவர் எம்எஸ் திரவியம், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்தகை, "இந்தியாவில் ஜனநாயக படுகொலை செய்யும் மோடி ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி அரசு தொடர்ந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறது. அதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் சிதைத்து வருகிறது. இதை கண்டித்து தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரதமர் பதவியில் இருந்து மோடியை இறக்கும் வரையில் காங்கிரஸ் கட்சியினரின் இந்தப் போராட்டம் தொடரும். மோடி ஆட்சி போதுமென்று மக்களும் நினைத்து விட்டார்கள் நாளை தேர்தல் வைத்தால் கூட மோடியும் பாஜகவும் படுதோல்வியை சந்திப்பார்கள். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் ரயில் போராட்டம் இல்லை எங்களுடையது. அமைதி வழியில் சுதந்திரம் பெற்று தந்த காந்தியின் வழிவந்தவர்கள் நாங்கள், மக்களுக்கு இடையூறு இன்றி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, “ஆருத்ரா கோல்டன் நிறுவன மோசடிக்கு அண்ணாமலை முதலில் பதில் சொல்லட்டும்” என பதில் அளித்தார். மேலும், அந்த போராட்டத்தின் போது மோடிக்கு எதிராகவும், பிஜேபி எதிராகவும் முழக்கமிட்டனர். அதை தொடர்ந்து ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை முன்னேறி செல்ல விடாமல் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து வந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணியினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னேற முயற்சித்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 4 வண்டி எண் 39237 நின்றுகொண்டு இருந்த வைகை எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி பின் புறம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை எக்ஸ்பிரஸ் 1.50 மணிக்கு கிளம்ப இருக்கும் நிலையில் 12:30 மணிகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்.. தூத்துக்குடி, கடலூர் மீனவர்கள் கோரிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.