ETV Bharat / state

கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன்? - காங். எம்எல்ஏ கேள்வி

கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

congress-mla-selvaperunthagai-raised-question-on-kodanad-case
கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன் - காங் எம்எல்ஏ கேள்வி
author img

By

Published : Aug 23, 2021, 4:30 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவாகரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரக்கோரி மனு அளித்துள்ளார்.

இதற்கு பேரவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், , இந்த விவாகரம் குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கோடநாடு விவகாரம் என்றாலே அதிமுக தலைவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்? ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "அதிமுக தலைவர்கள் ஊடகத்தைச் சந்தித்து கோடநாடு விவகாரம் குறித்து பேட்டியளிக்கிறார்கள், ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதிமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடவேண்டும்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர், இந்த விவகாரத்தில் பல மர்மங்கள் உள்ளன.

கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன் - காங் எம்எல்ஏ கேள்வி

பிணையில் வந்த சயானும், மனோஜும் டெல்லியில் ஏன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள். ஏன் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது" என்ற அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் பேச தயாராக இருப்பதாகவும், திமுக ஆட்சியில் கோடநாடு கொலை, கொள்ளை விவவாரத்திலும், ஜெயலலிதாவின் மரணத்திலும் நீதி கிடைக்கும். அதற்கான சரியான பாதையில் திமுக சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கருணாநிதியின் இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர் துரைமுருகன்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.