இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் கூறியதாவது, நேற்று முன்தினம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பேசும்போது, தேர்தல் பிரச்சாரத்தின் போது காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் உண்மைக்கு புறம்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதை நினைவுகூர்ந்தார்.
இது முழுவதும் தவறு இதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்காத காரணத்தால் வெளிநடப்பு செய்துள்ளோம். இது உண்மைக்கு புறம்பானது என்று எங்கள் மாநிலத் தலைவரும் அறிக்கை விடுத்துள்ளார். ராகுல் அவ்வாறு கூறியதற்கு முதலமைச்சரிடத்தில் ஆதாரம் இருக்கிறதா" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.