ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் பல்கலைக்கழகத்திற்கு சிக்கல்?

முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக புதிய சர்வே மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

conduct-new-survey-in-ex-minister-thambidurai-land-mhc

author img

By

Published : Sep 24, 2021, 7:20 AM IST

சென்னை : கோனம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், “தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை.

குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம், அருகில் கிராம நிலங்கள், நீர்நிலங்களை ஆக்கிரமித்து மின்சார துணைமின் நிலையம், தனியார் பாதை, மாணவர், மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் முன் இன்று(செப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் தரப்பில் தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய நோட்டீஸ் வழங்க வேண்டும். சர்வே முழுமையாக நடத்தப்பட வேண்டும். வீடுகள் கிராப் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, அதன் அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.