சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்து வருகிறது. இதில் பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு 40 வயது வரையிலும், மற்ற பிரிவினருக்கு 45 வயது வரையிலும் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும், மற்ற பிரிவினருக்கு 45லிருந்து 50 வயது வரையிலும் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது. ஏற்கனவே செப்டம்பர் 9 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கும் இந்த வயது உச்சவரம்பு தளர்வு பொருந்தும்.
இந்த உயர்த்தப்பட்ட உச்சவரம்பு 2022 டிசம்பர் 31 வரை ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவரையில் வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!