ETV Bharat / state

பல பெண்களிடம் சேட்டை... கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது! - Police arrested a computer engineer

சென்னை: பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று நடந்து செல்லும் பெண்களிடம் குறும்பு செய்த கணினி பொறியாளரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

sathish kumar
sathish kumar
author img

By

Published : Jan 24, 2020, 11:38 AM IST

சென்னையை அடுத்த நங்கநல்லூர் டிஎன்ஜிஓ, காலனி 7ஆவது தெருவில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், நடந்து சென்ற பெண்ணிடம் வரம்பு மீறி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இதனால், அச்சமடைந்த பெண் கூச்சலிட, அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றார்.

இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் மற்றொரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை கவனித்த அப்பகுதியினர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பதும், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது. நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தைத் தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் பல பெண்களிடம் இந்த முறையில் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, சதீஷ்குமாரை பழவந்தாங்கல் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவா மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்

Intro:பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களின் பின்புறம் தட்டி குறும்பு செய்த கம்பியூட்டர் என்ஜீனியர் கைது
Body:பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களின் பின்புறம் தட்டி குறும்பு செய்த கம்பியூட்டர் என்ஜீனியர் கைது

சென்னையை அடுத்த நங்கநல்லூர் டி.என். ஜி. ஓ., காலனி 7வது தெருவில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென நடந்து சென்ற இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டி அநாகரீகமாக நடந்துக் கொண்டார்.

அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறம் தட்டும் போது அப்பகுதியினர் வாலிபரை மடக்கி பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவை சேர்ந்த சதீஷ்குமார்(30). தனியார் கம்பியூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது.

நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்திருப்பதாக தெரியவந்தது.

பல பெண்களிடம் இந்த முறையில் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.