ETV Bharat / state

காரில் தொங்கியபடி பயணம்.. சென்னை மேயர் பிரியாவுக்கு சிக்கல்! - சென்னை மேயர் பிரியா ராஜன்’

முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் மேயர், மாநகராட்சி ஆணையர் தொங்கியபடி சென்ற வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து சட்டத்தை மீறும் வகையில் நடந்துக் கொண்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கான்வாய் வாகனத்தில் தொங்கியப்படிச் சென்ற மேயர், மாநகராட்சி ஆணையர் மீது புகார்

author img

By

Published : Dec 12, 2022, 7:18 AM IST

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.10ம் தேதி நேரில் ஆய்வு செய்தார். தென் சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதம் அடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திமுக மாவட்டச் செயலாளர் இளைய அருணா மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் போக்குவரத்து விதிகளை மீறி ஃபுட்போர்டு அடித்துக் கொண்டு பொதுவெளியில் சட்டத்தை மீறும் வகையில் நடந்தமைக்காக சாலை விதிகளின் ஒழுங்குமுறைகள் 1989 (2), மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989 (3), மோட்டார் வாகன விதிமுறைகள் 1968 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 93க்கு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணியமிக்க அரசுத் துறையில் இருந்துக் கொண்டு சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை விதிகளைக் காற்றில் பறக்க விட்ட மேற்கூறிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கொருக்குப்பேட்டை சேர்ந்த ஆர்.டி.ஐ.செல்வம் என்ற சமூக ஆர்வலர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.