சென்னை தி.நகரில் போக் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை மாநகராட்சியின் கரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து அக்கட்சி பிரதிநிதிகள் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்தித்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை கூறியதாவது, ”சென்னை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது. சென்னை மாநகர காவல் துறையும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஆறு தளம் கொண்ட கட்டிடம். ஒவ்வொரு தளமும் 7 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.
மொத்தமாக 14 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டிடம். இதனை சென்னை மாநகராட்சி கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனின் கோரிக்கை கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினோம். கடிதத்தை படித்தவிட்டு இதனை பயன்படுத்த முயற்சி எடுக்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி சென்று திரும்பியவருக்கு கரோனா உறுதி: 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை