ETV Bharat / state

நீதிமன்ற வழிகாட்டலின்படி உதவிகளை வழங்கலாம் - ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு! - கரோனா நிவாரணப்பணி புரிபவர்களுக்கு நிபந்தனை

சென்னை : ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் 48 மணி நேரத்திற்கு முன் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த பின்னரே உதவிகளை வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.

Commissioner Prakash announces regulations and rules for volunteers
நீதிமன்ற வழிக்காட்டலின்படி உதவிகளை வழங்கலாம் - ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு!
author img

By

Published : Apr 19, 2020, 2:39 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கு நீட்டிப்புச் செய்யப்பட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாள்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் ஏழை, எளிய மக்கள், தினக் கூலித் தொழிலாளிகள் ஆகியோர் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்றுவருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் பெருநகர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நோய் தொற்று பரவும் என்று காரணம் கூறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சில நாள்களுக்கு முன் தடை விதித்திருந்தது. பின்னர், அந்த தடையை மக்கள் கடுமையாக எதிர்த்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களின்படி உதவிகளை வழங்கலாம் என அறிவித்தது.

இருப்பினும் தொடர்ந்து தன்னார்வலர்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்ததையடுத்து சமூக ஆர்வலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Commissioner Prakash announces regulations and rules for volunteers
நீதிமன்ற வழிக்காட்டலின்படி உதவிகளை வழங்கலாம் - ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு!

உதவிப் பொருட்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள வழிகாட்டுதல்கள் :-

அதன்படி தனியார் அமைப்பு அரசு சாரா அமைப்புகள், குழுவினர் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் விநியோகம் செய்ய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

• உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 நேரத்திற்கு முன்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

• உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

• மண்டல அலுவலர் உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தை ஆய்வு செய்வது, அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறிந்த பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.

• எந்த மண்டலத்திற்கு உட்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ அந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்க வேண்டும்.

• அரசால் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்ட இடத்தில் உணவு வழங்கக்கூடாது.

• தயாரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட நேரத்துக்குள் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.

• உணவு வழங்கும் இடத்தில் ஓட்டுநர் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தன்னார்வ அமைப்பு, அரசு சாரா அமைப்புகள் உறவினர்கள் உள்ளிட்ட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

• உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மூன்று நபர்கள் மேல் பயணிக்கக் கூடாது.

• உணவு வழங்கும் போது சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

• மேற்கண்ட நிபந்தனைகளுடன் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உணவு வழங்க வேண்டும்.

• இவை தவிர அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கும் அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையாளர் பிரகாஷ், “ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்பு அரசு சாரா அமைப்புகள் கரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு மக்கள், தன்னார்வலர்கள் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் வழிகாட்டுதலின்படி உதவிகளை மேற்கொண்டு மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : மே 2 முதல் 31 வரை அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் - தலைமைப் பதிவாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.