சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் துவக்கத்தில் சிலிண்டர்களில் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையின் இன்று (டிச.1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!#cylinderprice #cylinderpricehike #commercialcylinderprice #evtbharattamilnadu pic.twitter.com/9KL0xTqHhm
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!#cylinderprice #cylinderpricehike #commercialcylinderprice #evtbharattamilnadu pic.twitter.com/9KL0xTqHhm
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 1, 2023வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!#cylinderprice #cylinderpricehike #commercialcylinderprice #evtbharattamilnadu pic.twitter.com/9KL0xTqHhm
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) December 1, 2023
சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், ரூ.26.50 உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் உணவகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக ரக்ஷா பந்தன் பண்டியையையொட்டியும், அக்டோபர் மாத துவக்கத்திலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. ஆனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை சமீப காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உணவுப் பொருட்கள் விலையும் உயரும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Ind Vs Aus : தொடர் யாருக்கு? 4வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!