சென்னை: ஐஐடியில் முதுகலைப் பாடப்பிரிவில் 2 ஆண்டுகள் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் சர்வதேச மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கற்றல் சூழலின் ஒரு பகுதியாக இருக்கச் சிறந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை
இந்தியாவில் இடைநிலை முதுகலைப் பட்டத்தை வழங்கும் ஒரே கல்வி நிறுவனம். இது உலகளாவிய பொறியியல், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வரையறுக்கும் தற்போதையப் பகுதிகளில் கற்கவும் வேலை செய்யவும், மாணவர்களுக்கு முன்னோடியில்லாத அளவிலான கல்வி நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. சிறந்த பதிவுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
உலகளாவிய சந்தை
இதுகுறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி கூறுகையில், "சென்னை ஐஐடி வளாகத்தை சர்வதேசமயமாக்கல் நோக்கத்தில் இந்த முக்கியத் திட்டங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பல்வேறு சிந்தனைகள் மற்றும் கலாசாரங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் உலகளாவிய சந்தையில் போட்டியிடும்போது, இந்த முயற்சி இந்தியாவின் விஸ்வ குரு அந்தஸ்தை நிறுவுவதற்கான திசையில் ஒரு படியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இடைநிலை முதுகலைப் பட்டங்கள் ஒன்பது இடைநிலைப் பகுதிகளில் கிடைக்கின்றன.
அவைகள் பின்வருமாறு:
1. எரிசக்தி முறைகள்
2. ரோபாட்டிக்ஸ்
3. குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
4. கணக்கீட்டு பொறியியல்
5. மேம்பட்ட பொருள்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம்
6. தரவு அறிவியல்
7. சைபர் பிசிகல் சிஸ்டம்ஸ்
8. இயக்கவியலில் சிக்கலான முறைகள்
9. பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்