ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயில்: சூடு பிடிக்கும் இளநீர் வியாபாரம்! - இளநீர் வியாபாரம்

சென்னை: வியாபாரம் தற்போது எதிர்பார்த்த அளவில் இல்லை என்றாலும் வெயிலின் தாக்கத்தையொட்டி இளநீர் வியாபாரம் சூடு பிடிக்கும் என இளநீர் வியாபாரி தெரிவித்தார்.

சுட்டெரிக்கும் வெயில்: சூடுபிடிக்கும் இளநீர் வியாபாரம்

author img

By

Published : May 11, 2020, 3:00 PM IST

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. வழக்கமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இளநீர் வியாபாரம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்தாண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இளநீர் வியாபாரம், நீர் மோர் வியாபாரம், ஐஸ் கிரீம், குளிர்பான விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனை குறிவைத்து சாலையோரங்களில் ஏராளமான இளநீர் வியாபாரிகள் தள்ளு வண்டி கடைகளை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து வியாபாரி கூறுகையில், “நீண்ட நாள்களுக்குப் பிறகு இளநீர் கடையை திறந்துள்ளதால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால், அடுத்த சில நாள்களில் வெயிலின் தாக்கத்தையொட்டி இளநீர் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இளைநீர் பருகிக் கொண்டிருந்த ஒருவர் கூறுகையில், “நீண்ட நாள்களாக வீட்டில் இருந்துவிட்டு தற்போது திடீரென வெளியே வருவதால் வெப்பத்தை தாங்க இயலாமல் இளநீர் குடிக்க வந்தேன். இளநீர் விலை பெரிய அளவில் உயரவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கோடையில் வாடும் இளநீர் வியாபாரிகள்: பசியின்றி உறங்குவதை உறுதி செய்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.