ETV Bharat / state

பரப்பளவில் விரிவடையும் சென்னை நகரம்.. சிஎம்டிஏ திட்டம் என்ன?

காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய இடங்களை புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
author img

By

Published : Feb 11, 2023, 8:00 AM IST

சென்னை: புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய இடங்களைச் சேர்க்கச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority, CMDA) திட்டமிட்டுள்ளதால், காஞ்சிபுரத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுத் தன்மை பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மீஞ்சூர் ஆகிய புதிய நகரங்களுக்கான பகுதிகள் குறித்து மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, காஞ்சிபுரத்தில் 18 வருவாய் கிராமங்கள் 62.7 சதுர கி.மீ. கொன்னேரிக்குப்பம், சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட 18 கிராமங்கள் அடங்கும்.

புதிய நகரம் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை, காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலை மற்றும் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை ஆகியவற்றால் இணைக்கப்படும். இந்த நகரமானது இடையூறான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய பகுதியில் திட்டமிடப்படாத வணிக வளர்ச்சிகள் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது மற்றும் நகரத்தின் பாரம்பரிய தன்மையை மோசமாக பாதித்தது என்று சுட்டிக் காட்டிய சி.எம்.டி.எ, காஞ்சிபுரத்தின் கடந்தகால நகரமயமாக்கல் போக்கின் அடிப்படையில் (2003-2020), NH-48 (சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை) நோக்கி வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய நகரம் மற்றும் நியூ டவுன் ஆகியவற்றின் வளர்ச்சியின் பரப்பளவு பாரம்பரிய வளாகங்கள், வணிக வளர்ச்சிகள் மற்றும் நகரமயமாக்கலுக்குப் பிந்தைய போக்குகள் உட்பட வரையறுக்கப்பட்டுள்ளது, என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் புதுநகர் திட்டத்தில் 11 வருவாய் கிராமங்கள் 37.7 சதுர கி.மீ. மீஞ்சூர் புதுநகரில் 111.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 12 வருவாய் கிராமங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பேனா'வை உங்களுக்கு தெரியும்! - முதலமைச்சர் சொல்வதென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.