ETV Bharat / state

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள்!

author img

By

Published : Mar 9, 2020, 3:39 PM IST

சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

adamk
adamk

மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 ராஜ்ய சபா இடங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களைவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் மூவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இவர்கள் 3 பேரும் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.