சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 21) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இன்றைய மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் முதலமைச்சரின் மகன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப்பேசினார். இதனை நேரில் பார்க்க முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி, முதலமைச்சரின் பேரன் நளன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்து பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பார்த்தனர்.
முன்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தாலும், பாரம்பரியமிக்க நூற்றாண்டு கண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பேசுவது இதுவே முதல்முறை ஆகும். உதயநிதி ஸ்டாலின் பேரவையில் பேசியதை அவர்களது குடும்பத்தினர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'என் காரில் தாராளமாக நீங்கள் ஏறலாம்; ஆனால் அதில் கமலாலயம் சென்று விட வேண்டாம்..!' : ஈபிஎஸ்ஸை கலாய்த்த உதயநிதி